மனிதர்கள் வாழும் வகையில் பூமியை முதலில் மாற்றுங்கள் என்ற இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கருத்துக்‍கு குவியும் பாராட்டு

Oct 15 2021 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

விண்வெளிக்‍கு சுற்றுலா செல்வதை விட்டுவிட்டு, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பூமியை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களான ஜெப் பேசாஸ், எலான் மஸ்க், ரிச்சர்டு பிரான்சன் உள்ளிட்டோர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால், விண்வெளி சுற்றுலாவை வர்த்தக ரீதியில் கொண்டு வருவதற்காக கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் BBC செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, மனிதர்கள் வாழும் பூமியை காப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாற்றத்தை ஏற்படுத்த முனைபவர்கள், புதிய கிரகத்தை தேடாமல். மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் நமது பூமியை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இங்கிலாந்து இளவரசரின் இந்த கருத்துக்‍கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டும், ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00