தொழில்நுட்பத்தைக்‍ கொண்டு பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், பொதுமக்‍களை வேவு பார்ப்பது கண்டனத்திற்குரியது - பெகாசஸ் விவகாரத்தில் அமெரிக்‍கா கருத்து

Jul 24 2021 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

தொழில்நுட்ப வளர்ச்சியை பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்‍களை வேவு பார்க்‍க பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என பெகாசஸ் விவகாரம் குறித்து அமெரிக்‍கா கருத்து தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலமாக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் செல்ஃபோன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தேச துரோகம் என குறிப்பிட்டுள்ள திரு. ராகுல் காந்தி, இதுகுறித்து மத்திய பா.ஜ.க. அரசு மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பெகாசஸ் ஒட்டுக்‍கேட்பு விவகாரத்திற்கு சீனாவும், அமெரிக்‍காவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இப்பிரச்சனையால் இந்தியாவில் நிலவும் சூழல் குறித்து கருத்து தெரிவிக்‍கவில்லை எனக்‍ குறிப்பிட்டுள்ள அமெரிக்‍கா, அதேநேரம் தொழில்நுட்ப வளர்ச்சியை, பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்‍களை வேவு பார்க்‍க பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00