நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்ட தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்‍கு ஜாமீன்

Jul 23 2021 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்ட தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஜூமா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக அதிபா் பதவி வகிக்கும் சிறில் ராமபோசா தோந்தெடுக்கப்பட்ட நிலையில், ஜேக்கப் ஜூமா கடந்த 2018ம் ஆண்டு ராஜினாமா செய்துள்ளார். ஜூமாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் அவா் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மாதம் 29ந்தேதி 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து, கடந்த 7ந்தேதி ஜூமா போலீசாரிடம் சரணடைந்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து, அவரது ஆதரவாளா்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். சொத்துக்‍கள் சேதப்படுத்தபடுத்தப்பட்டன.

இந்நிலையில், அவரது சகோதரா் மைக்கேல் ஜூமாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, கருணை அடிப்படையில் ஜூமாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00