புனித தலங்களான மெக்‍கா மற்றும் மதினாவில் முதல்முறையாக பாதுகாப்பு பணியில் பெண்கள் நியமனம் - சவுதி அரேபியா அரசு நடவடிக்கை

Jul 22 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களான மெக்‍கா மற்றும் மதினாவில் பாதுகாப்பு பணியில் முதன்முதலாக பெண்கள் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அங்கு பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நவீன சமுதாய கட்டமைப்புகளை வரும் 2030-ம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டவும், தனியாக பயணம் செய்யவும் அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல், மெக்கா மற்றும் மதீனாவில் பாதுகாப்புப் பணியில் ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது மெக்காவில், உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இடத்தில், காக்கி உடையணிந்த பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்‍கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், சவுதி அரேபிய இளவரசருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00