பிரான்ஸில் இனி முகக்கவசம் அணிய கட்டாயமில்லை - அரசின் அறிவிப்பால் உற்சாகமடைந்த மக்‍கள்

Jun 18 2021 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பொதுமக்கள் இனி முகக் கவசங்களை அணிய கட்டாயமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஃபிரான்ஸ் நாட்டில், அரசின் தீவிர நடவடிக்‍கையால் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் வரும் 20-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்‍கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், யூரோ கால்பந்து போட்டிகள் நடைபெற்று வேளையில், தற்போது அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கால் ஃபிரான்ஸ் கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்து வந்தது. இந்நிலையில், பிரான்ஸ் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. பிரான்ஸில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பொதுமக்கள் இனி முகக் கவசங்களை அணிய கட்டாயமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பால், அந்நாட்டு மக்‍கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, தென்கொரியா போன்ற நாடுகள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00