அமெரிக்‍காவை உலுக்கிய கறுப்பின இளைஞர் George Floyd கொலை வழக்‍கு - குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல் அதிகாரிக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை

Apr 21 2021 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவை உலுக்கிய கறுப்பினர் இளைஞர் கொலை வழக்‍கில், முன்னாள் காவல் அதிகாரிக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி, Minnepolis நகரில் உள்ள சூப்பர் மார்கெட்டில், George Floyd என்ற கறுப்பின இளைஞர், கள்ள நோட்டு வைத்திருந்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கை விலங்கிட்டு சாலையில் கிடத்திய Derek Chauvin என்ற காவல் அதிகாரி, காலால் நெஞ்சை நெறித்தார். இதில் மூச்சுத்திணறி Floyd உயிரிழந்தார். கடைசி தருணத்தில் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என George Floyd கெஞ்சியும், காவல் அதிகாரி இரக்‍கமின்றி நடந்துகொண்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இப்படுகொலைக்‍கு நீதி கேட்டு, George Floyd-ன் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தனர். இந்த வழக்‍கு 12 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்த நிலையில், காவல்துறை அதிகாரி Derek Chauvin குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் அவரை 40 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்‍க உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியான அடுத்த சில நொடிகளில் நாடு முழுவதும் பொதுமக்‍கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, நீதிமன்ற வாயிலில் காத்திருந்த ஏராளமானோர், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆனந்தக்‍ கண்ணீருடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனிடையே, நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அமெரிக்‍க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த அதிபர் ஜோ பைடன், பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலைக்‍கு, குற்றவாளிக்‍கு வழங்கப்பட்ட தண்டனையை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும், நீதியை நோக்‍கிய அணிவகுப்பில் இத்தீர்ப்பு முக்‍கிய​மைல்கல்லாக இருக்‍கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, தீர்ப்பு வெளியானவுடன், George Floyd-ன் பெற்றோருக்‍கு, அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00