ஏழை மற்றும் பணக்கார நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு உள்ளது : பருவநிலை செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு

Apr 21 2021 8:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் பணக்கார நாடுகள், பெரும்பாலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொண்டதால், ஏழை நாடுகளில் பெரும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக பருவநிலை செயற்பாட்டாளர் Greta Thunberg குற்றம்சாட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்தந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்நிலையில், உலகளவில் பருவநிலைமாற்றம் தொடர்பான தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்த Greta Thunberg, தனது அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம் யூரோக்களை உலக சுகாதார நிறுவன அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். இந்த தொகை, ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வாங்க உதவிசெய்யும் என தெரிவித்த Thunberg, பணக்கார நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிடையே நிலவும் தடுப்பூசி ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கங்கள், தடுப்பூசி உருவாக்குபவர்கள் மற்றும் உலக மக்கள் முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உலகில் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளோருக்கு தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் நிலையில், பணக்கார நாடுகள் இப்போது இளைஞர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் தடுப்பூசி போட்டு வருவது முற்றிலும் தவறானது என்றும் Thunberg சுட்டிக் காட்டினார்.

அதிக வருமானம் கொண்ட நாடுகளில், 4 பேரில் ஒருவர் இதுவரை தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதே நேரத்தில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், 500-ல் ஒருவர் மட்டுமே தடுப்பூசியை பெற்றுள்ளனர். எனவே, சர்வதேச சமூகம், அரசாங்கங்கள் மற்றும் தடுப்பூசி உருவாக்குபவர்கள், இந்த தடுப்பூசி ஏற்றத்தாழ்வு பிரச்னையை நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00