அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து பயன்படுத்த நிரந்தரமாகத் தடை : உலகிலேயே முதல் நாடாக டென்மார்க் அறிவிப்பு

Apr 15 2021 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே முதல் நாடாக டென்மார்க்‍கில் அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து பயன்படுத்த நிரந்தரமாகத் தடைவிதிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஜான்சன் அண்டு ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதால் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், மிகவும் அரிதாகவே இது போன்ற பிரச்சினை ஏற்படுவதாகவும், அமெரிக்‍காவில் 70 லட்சம் பேருக்‍கு ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசி போடப்பட்டதில் 6 பேருக்‍கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே, அமெரிக்‍கா மற்றும் தென்னாப்ரிக்‍காவில் ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்திவைக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், டென்மார்க்‍கில் அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து பயன்பாடு நிரந்தரமாக நிறுத்திவைக்‍கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதால் இந்நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்மார்க்‍கில் ஏற்கெனவே பத்து லட்சத்துக்‍கும் மேற்பட்டவர்களுக்‍கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், அதில் 15 சதவிகிதம் பேருக்‍கு அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00