ஃபுகுஷிமாவில் தேக்‍கிவைக்‍கப்பட்டுள்ள அணுக்‍ கதிர்வீச்சுடன் கூடிய தண்ணீரை கடலில் விடுவிக்‍கும் ஜப்பானின் முடிவுக்கு எதிர்ப்பு : பன்னாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட தென்கொரியா முடிவு

Apr 15 2021 6:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபுகுஷிமாவில் தேக்‍கிவைக்‍கப்பட்டுள்ள அணுக்‍கதிர்வீச்சுடன் கூடிய தண்ணீரை கடலில் விடுவிக்‍கும் ஜப்பானின் முடிவை எதிர்த்து பன்னாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட தென்கொரியா முடிவெடுத்துள்ளது.

ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமாவில் செயல்பட்டு வந்த அணு உலை, கடந்த 10 ஆண்டுகளுக்‍கு முன் சுனாமியால் பாதிக்‍கப்பட்டு பேரழிவு ஏற்பட்டது. அப்போது அணு உலையிலிருந்து கசிந்த கதிர்வீச்சுடன் கூடிய பத்து லட்சம் டன்னுக்‍கு மேற்பட்ட தண்ணீர் பாதுகாக்‍கப்பட்டுவருகிறது. ஆனால், தற்போது இந்த தண்ணீரை கடலில் விடுவிக்‍க ஜப்பான் முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ஜப்பானின் இந்த முடிவுக்‍கு எதிராக பன்னாட்டு நீதிமன்றதில் முறையிடும் வாய்ப்புக்‍கள் குறித்து உடனடியாக ஆராய, தென்​கொரிய அதிபர் மூன் ஜே இன் அதிகாரிகளுக்‍கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00