சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் தரை தட்டிய சம்பவம் - நஷ்டஈடு கேட்டு கப்பலை பறிமுதல் செய்தது எகிப்து அரசு

Apr 14 2021 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய சம்பவத்தில் உரிய நஷ்டஈடு கேட்டு 'எவர் கிவன்' சரக்கு கப்பலை எகிப்து அரசு பறிமுதல் செய்துள்ளது.

உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையில் ஒன்று எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய். சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி வந்த 'எவர் கிவன்' எனும் சரக்குக் கப்பல், இந்த சூயஸ் கால்வாயை சில வாரங்களுக்கு முன் கடந்த போது குறுக்கும் நெடுக்குமாக சிக்கிக் கொண்டது. இரு வார காலத்துக்கும் மேலாக இரவு பகல் பாராமல் நடைபெற்ற மீட்பு பணி மூலம் அந்த கப்பல் மீட்கப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்நிலையில் சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியதால் போக்குவரத்து தடைபட்டு தங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது. தொள்ளாயிரம் மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இழப்பீடாக தரவேண்டும் என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் சார்பில் எகிப்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கப்பல் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அதுவரை கப்பலை பறிமுதல் செய்யலாம் எனவும் எகிப்து அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, 'எவர் கிவன்' கப்பல் சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00