கொரோனா தடுப்பூசி போட்ட 6 பேருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை - ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க அரசுக்கு பரிந்துரை

Apr 13 2021 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, அந்த தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைத்து அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்காவில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 6 பெண்களுக்கு, ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டதோடு, இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க, அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து நிபுணர் குழு நாளை ஆலோசிக்கவுள்ளதாகவும், செயல்முறைகள் முழுமையாக நிறைவடையும் வரை, இந்த தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 68 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00