ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவரை விடுதலை செய்ய வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் - 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறை

Jan 24 2021 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் நவல்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் நவல்னி, கடந்த ஆகஸ்ட் மாதம் விமானத்தில் செல்லும் போது நடு வானில் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டார். நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதை ஜெர்மனி அரசு உறுதிப்படுத்தியது. சிகிச்சைக்கு பின் கடந்த வாரம் நாடு திரும்பிய நவல்னியை, ரஷ்ய போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நவல்னி ஆதரவாளர்கள், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தலைநகர் மாஸ்கோவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை போலீசார் கைது சென்று அழைத்துச் சென்றபோது, பெண் ஒருவர் போலீசாரை அணுகி விசாரிக்க முயன்றார். அப்போது, போலீசார் அப்பெண்ணை வயிற்றிலேயே எட்டி உதைத்து தரையில் தள்ளினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00