ஆளும் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை செயல்படுத்த நடவடிக்கை - வடகொரியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு

Jan 22 2021 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆளும் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை செயல்படுத்த உறுதி ஏற்கும் வகையில், வடகொரியாவில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

வடகொரியாவில் ஆளும் கட்சியின் 8-வது மாநாடு, கடந்தவாரம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அதிபர் Kim Jong Un, ராணுவ பலத்தை பெருக்‍கவும், அணு ஆயுதப் போரை முறியடிக்கும் ஆற்றலை பெறவும் நாட்டு மக்‍கள் பாடுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் எடுக்‍கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த உறுதிபூண்டு, தலைநகர் Pyongyang-ல் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. முன்னாள் அதிபர் Kim Sung சதுக்‍கத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், கட்சி மற்றும் தேசியக்‍ கொடிகளுடன் பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள் திரண்டு, இசையுடன் மாபெரும் அணிவகுப்பு நடத்தினர்.

வடகொரியாவின் ராணுவ பலத்தை வெளிப்படுத்தும் வகையில், ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன், நீர்மூழ்கிக்‍ கப்பலில் இருந்து பாய்ந்து சென்று எதிரியின் இலக்‍கை அழிக்‍கும் நவீன ஏவுகணையும் இடம்பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00