அடுத்த 100 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் - அமெரிக்‍க மக்‍களுக்‍கு அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள்

Jan 22 2021 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக முகக்‍கவசம் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சினை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் மாதம் வரை அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் குறைந்தது 50 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00