இந்தோனேசிய நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Jan 17 2021 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிகை 42ஆக உயர்ந்துள்ளது. மேலும் 630-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் சாலைகள், வீடுகள், உணவகங்கள், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன. கடந்த 2004-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடல் பகுதியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக மிகப் பெரிய சுனாமி ஏற்பட்டது. இதில், இந்தியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகளில் 2.3 லட்சம் பேர் உயிரிழந்தனர். அவர்களில் 1.7 லட்சம் பேர் இந்தோனேசியாவைச் சோந்தவர்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00