இத்தாலியில் முதியோர் இல்லத்தில் விஷவாயு கசிந்து விபத்து - 5 பேர் பலி

Jan 17 2021 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி நாட்டில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற நகரில் வில்லா டெய் டைமெண்டி என்ற முதியோர் இல்லம் உள்ளது. இங்கு 10-க்கும் அதிகமான முதியோர்களும் அவர்களுக்கு உதவியாக மருத்துவ ஊழியர்களும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், அந்த முதியோர் இல்லத்தில், நேற்று அதிகாலை திடீரென கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுவை சுவாசித்ததால், முதியோர் இல்லத்தில் இருந்த அனைவரும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மயங்கிக்கிடந்த அனைவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00