சோமாலியாவில் ஐஸ் க்ரீம் பார்லரில் நடந்த தற்கொலைத் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு - காயமடைந்த 8 பேருக்கு சிகிச்சை
Nov 28 2020 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சோமாலியாவின் மொகாடிசு நகர ஐஸ் க்ரீம் பார்லரில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மொகாடிசு நகரின் மையப்பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அல் ஷபாப் தீவிரவாதிகள் இது போன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த தற்கொலைத் தீவிரவாதி ஒருவர் பொதுமக்கள் கூட்டமாக இருந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.