தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நடனம் - மழையை பொருட்படுத்தாமல் ஆரவாரத்துடன் கண்டுகளித்த ஆதரவாளர்கள்

Oct 21 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மழைக்கு மத்தியில் குடையுடன் நடனமாடியபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலின் போது நாட்டின் துணை அதிபரும் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வகையில் ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு திடீரென மழை பெய்ததால், குடையை பிடித்துக் கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்த கமலா ஹாரிஸ், ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குடையை பிடித்தபடியே மழையில் நடனமாடினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

10 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதனிடையே குடையுடன் தான் நடனமாடும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள கமலா ஹாரிஸ், மழையோ அல்லது வெயிலோ ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது என பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00