கஜகஸ்தான் நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் - ஆயிரத்து 772 பேர் உயிரிழப்பு

Jul 10 2020 2:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜகஸ்தான் நாட்டில் கொரோனா வைரசைவிட அதிகமாக நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கஜகஸ்தான் நாட்டில் நிமோனியா காய்ச்சலால் மக்‍கள் அதிகம் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதன் தாக்‍கம் கொரோனா வைரசை விட மோசமானதாக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஆறு மாதங்களில் அந்நாட்​டில் ஆயிரத்து 772 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நிமோனியாவால் பாதிக்‍கப்பட்டு 628 பேர் மரணமடைந்துள்ளனர். அந்நாட்டில் 51 ஆயிரத்து 50 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில் 264 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பை விட நிமோனியாவால் அங்கு அதிகம் பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் கஜகஸ்தானில் வசிக்‍கும் தங்கள் நாட்டு மக்‍களை விழிப்புணர்வுடன் இருக்‍கும்படி தூதரகம் மூலம் அறிவுறுத்தி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00