கோடிக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற தேசிய வருடாந்திரத் தேர்வுகள் பெருமளவு நிறைவடைந்ததாக சீனா அறிவிப்பு

Jul 10 2020 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் உயர்கல்விக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் இந்தத் தேர்வு அமைந்துள்ளது. தேசியக் கல்லூரிகளில் இடம்பிடிப்பதற்கான நுழைவுத் தேர்வான இத்தேர்வு, சீன மொழியில் Gaokao என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வுகள் நாடு முழுவதும் 7 ஆயிரம் இடங்களில் 4 லட்சம் மையங்களில் நடத்தப்பட்டன. 9 லட்சத்து ஐம்பதாயிரம் அலுவலர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இத்தேர்வுகளில் ஒரு கோடியே 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். பெய்ஜிங் நகரில் தேர்வெழுத வந்த லட்சக்கணக்கான மாணவர்கள், சிவப்பு வண்ண உடைகளுடன் முகக்கவசங்கள் அணிந்த படி தேர்வில் பங்கேற்றனர். சிவப்பு வண்ண உடைகள், அதிர்ஷ்டம் பொருந்தியவை என்றும், தேர்வில் வெற்றிபெற அவை உதவும் என்பது, மாணவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00