மெல்போர்ன் நகரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று : மீண்டும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்

Jul 10 2020 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெல்போர்ன் நகரில் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் சுமார் ஐம்பது லட்சம் பேர் வசித்துவருகின்றனர். விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ள இந்நகரில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நோய் தொற்று அதிகரித்தது. இதையடுத்து நேற்று முதல் ஆறு வாரங்களுக்கு மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் தொழில் மற்றும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்றாலும், இந்நடவடிக்கை தவிர்க்கமுடியாதது என உயரதிகாரிகள் தெரிவித்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் போலீசாரும், ராணுவத்தினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது. விக்டோரியா மாநிலதில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால், அங்கிருந்து பொதுமக்கள் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திற்குள் நுழைய ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00