சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் பணிகள் தீவிரம் - சர்ச்சைக்குரிய ஹாங்காங்கில் அலுவலகம் திறப்பு

Jul 8 2020 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹாங்காங்கின் தன்னாட்சி கோரிக்கையை முடக்கும் நோக்கில், சீன அரசு புதிதாக கொண்டு வந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதற்காக ஹாங்காங்கில் அலுவலகத்தை திறந்துள்ளது.

பிரிட்டன் வசமிருந்த ஹாங்காங் சீனாவுடன் இணைக்கப்பட்டது. எனினும் அந்நாட்டு மக்கள் சுயாட்சி கோரி போராடி வருகின்றனர். இதுதொடர்பான போராட்டங்களும் அண்மையில் தீவிரமடைந்துள்ளன. ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்தை ரத்து செய்யவேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை ஒடுக்கும் விதமாக, சீனா புதிதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம். இந்த சட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள சீனா, ஹாங்காங்கில் அதற்கான அலுவலகத்தை திறந்துள்ளது. அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00