சீனாவின் தூண்டுதலின்பேரில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நேபாள அரசு - பிரதமர் சர்மா ஒலிக்கு நெருக்கடி முற்றுகிறது

Jul 6 2020 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் தூண்டுதலின்பேரில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நேபாள பிரதமர் K.P.Sharma Oli-க்கு எதிராக ஆளுங்கட்சியில் போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளதால், அவருடைய பதவி எந்த நேரத்திலும் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் பிரதமர் K.P.Sharma Oli தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால், கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தா தலைமையில் இன்னொரு கோஷ்டி செயல்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை Sharma Oli நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி அவரை பதவி விலகுமாறு பிரசாந்தா ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து புதிய வரைபடத்தை நேபாள அரசு உருவாக்கி இருப்பதை பிரசாந்தா ஆதரவாளர்கள் விரும்பவில்லை. மேலும், இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை Sharma Oli கூறி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் சக்திவாய்ந்த 45 உறுப்பினர் கொண்ட நிலைக்குழுவில் பெரும்பாலானோர் பிரதமர் Sharma Oli-க்கு எதிராகவே உள்ளனர். இதனால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், Sharma Oli-யின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடப்பதாக இருந்தது. ஆனால், கருத்து வேறுபாடுகளை தீர்க்க தலைமைக்கு கூடுதல் காலஅவகாசம் அளிக்கும் வகையில் இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட இந்த நிலைக்குழுக்கூட்டம், மீண்டும் நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியில் Sharma Oli நீடிப்பாரா என்பது அன்றைய தினம் தெரியவரும். இதனிடையே, கட்சியின் செயல் தலைவர் பிரசாந்தாவை Sharma Oli இன்று சந்திக்க உள்ளார். அதற்கு முன்பாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான Pushpa Kamal Dahal, பிரதமர் Sharma Oli-ஐ சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00