பதவி விலகுமாறு ஆளும் கட்சி தலைவர்கள் தொடர்ந்து போர்க்‍கொடி - அதிபருடன் நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா திடீர் ஆலோசனை

Jul 5 2020 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை பதவி விலகுமாறு கூறி ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் போர்க்கொடி துாக்கி வரும் நிலையில், அதிபர் தேவி பண்டாரியை பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நேபாளம் பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்க இந்தியா முயற்சிப்பதாக, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், கடந்த 30-தேதி ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழு கூட்டம் பலுவடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த புஷ்ப கமல் பிரசண்டா, பிரதமரின் பேச்சு, இந்தியா உடனான உறவை சீர்குலைக்கும் என எச்சரித்தார். இதையடுத்து இந்தியா மீதான புகாருக்கு ஆதாரம் தர முடியவில்லையெனில் பதவி விலகுமாறு ஷர்மாவை கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் ஷர்மா ஒலி, அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். இதனைத்தொடர்ந்து, காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகைக்‍குச் சென்ற பிரதமர் ஷர்மா, அதிபர் தேவி பண்டாரியை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன்மூலம் நோபளம் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்படத் துவங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00