பிரான்சின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்பார் : அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவிப்பு

Jul 4 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்பார் என அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமராக பதவி வகித்த எட்வர்ட் பிலிப், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் சரியாக செயல்படவில்லை என கருத்து நிலவுகிறது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அந்நாட்டு மக்களுக்கு முகக்கவசம் மற்றும் மருத்துவ கருவிகள் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், பரிசோதனைகளும் முறையாக நடைபெறவில்லை என்ற புகாரும் எழுந்தது. இதன் எதிரொலியாக கடந்த 28ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தலைமையிலான அரசு அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இதனால் பிரதமர் எட்வர்ட் பிலிப்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கொரோனா வைரஸ் பிரச்சினையில் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட ஜீன் காஸ்டெக்ஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என அதிபர் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00