அமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் - போராட்டத்தை கட்டுப்படுத்த 6 மாகாணங்களில் ராணுவம் வரவழைப்பு

May 31 2020 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டத்தை கட்டுப்படுத்த 6 மாகாணங்களில் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னயாபொலிஸ் நகரில், கடந்த 25-ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னயாபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. மின்னிசோட்டா, ஜார்ஜியா, ஓஹியோ, கொளாரடோ, டெக்சாஸ், கொலம்பியா ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் காவல்துறையினரின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நாசா நிகழ்ச்சிக்காக ப்ளோரிடா சென்றிருந்த அதிபர் ட்ரம்ப், போராட்டங்கள் காரணமாக வெள்ளை மாளிகை திரும்பினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00