சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 லட்சத்தை கடந்தது - உயிரிழப்பும் 3 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியது

May 31 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 3 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ், சுமார் 210-க்‍கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனாவின் தாக்கம் நாளுக்‍கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்நாட்டில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 98 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் 3 லட்சத்து 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்‍கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 61 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00