அமெரிக்காவில் கருப்பினத்தவரை தாக்கிய காவலர் கொலைக் குற்றச்சாட்டில் கைது

May 30 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் மினசோட்டா மாநில தலைநகர் மினியாபொலிசில் கடந்த 25ம் தேதி பௌடர்பார்ன் உணவகம் ஒன்றில் போலி ரசீது கொடுத்து ஒருவர் ஏமாற்ற முயன்றதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையிர்ல அங்கு சென்ற போலீசார், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரைக் கைது செய்ய முயன்றனர். அவர் சரியாக ஒத்துழைக்காததால் வலுக்கட்டாயமாக அவரைப் பிடித்த போலீசார், பின்னர் அவரை காவல் துறை வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது காவலர் டெரெக் சாவின் என்பவர், ஜார்ஜ் ஃப்ளாய்டை கீழே தள்ளி, முழங்காலால் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் மூச்சுவிட முடியாமல் தவித்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், ஒரு கட்டத்தில் மயக்கமடைந்துவிட்டார். பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஃப்ளாய்ட், அங்கு உயிரிழந்தார். காவலர் டெரெட் சாவிட் மீது ஏற்கெனவே அலுவலக ரீதியாக 18 புகார்கள் எழுந்துள்ளன. அதில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது குறித்தும் புகார் இருந்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நான்கு காவலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்; காவலர் டெரெட் சாவிட் மீதுகொலை வழக்கு பதிவு செய்து அவர், ஏற்கெனவே போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, போலீசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00