அமெரிக்காவில் கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் : ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருத்தம்

May 29 2020 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், கொரோனாவால் ஒரு லட்சம் பேரை இழந்துவிட்டதாக, அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப், வருத்தம் தெரிவித்துள்ளார்.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. அங்கு, இதுவரை, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 319 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துவிட்டது. அமெரிக்காவிற்கு அடுத்த இடங்களில் பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்க பலி எண்ணிக்கை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், கொரோனாவால் ஒரு லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான மைல்கல்லை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த நேரத்தில் பணியாற்றுபவர்களுக்கு தனது அன்பையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார் எனப் பதிவிட்டுள்ளார். சீனாவிடம் இருந்து பெறப்பட்ட மோசமான பரிசான கொரோனா உலகம் முழுவதும் வலம் வருவதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00