பிரேசிலில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 151 பேருக்கு வைரஸ் தொற்று - உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 லட்சமாக அதிகரிப்பு

May 29 2020 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சமாக அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா பரவல் கணிசமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் இவ்வைரஸ் அதிவேகமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு ஆயிரத்து 294 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 26,991 ஆக உயர்ந்துள்ளது.

மற்றொரு தென் அமெரிக்க நாடான பெருவில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 874 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சிலி, இக்வேடார் உள்ளிட்ட பிற தென் அமெரிக்க நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 3 லட்சத்து 61 ஆயிரத்து 763 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 லட்சத்து 274 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, 25 லட்சத்து 77 ஆயிரத்து 176 பேர், குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 29 லட்சத்து 61 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில், உலகளவில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00