அமெரிக்காவுக்கு மருந்து வழங்கிய இந்தியாவுக்கு நன்றி : இந்தியாவின் உதவியை மறக்கமாட்டோம் - அதிபர் டொனால்டு ட்ரம்ப்

Apr 9 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்‍கு விதித்த தடையை நீக்கிய இந்தியாவுக்‍கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த உதவியை மறக்‍க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்‍கு தேவையான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அமெரிக்‍காவுக்‍கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்‍க பதிலடி கொடுக்‍கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்‍கு மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை, மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்காக இந்தியாவுக்‍கு ட்ரம்ப் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''அசாதாரண நேரங்களில் நண்பர்களுக்கு இடையே மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை வழங்க எடுத்த முடிவில் இந்தியாவை மறக்‍க முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00