அல் நாஸர் கிளப்பில் டிரைவ்-த்ரூ கொரோனா சோதனை மையம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு

Apr 8 2020 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசை எதிர்ப்பபதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, துபாய் சுகாதார ஆணையம், அல் நாஸர் கிளப்பில் டிரைவ்-த்ரூ கொரோனா சோதனை மையம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால், பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அறிகுறிகளுடன் இருக்கக்கூடிய நபர்களுக்கு பல்வேறு நாடுகளும் சோதனை செய்து குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரோனா தாக்கம் உண்டா இல்லையா என பரிசோதனை முடிவுகளை சொல்லி விடுகிறது. இதன்மூலம் மற்றவர்களுக்கு பரவுவதற்கு முன்பாகவே நோயாளிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, போதிய சிகிச்சைகள் மேற்கொள்ள முடிகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் சுகாதார ஆணையம், அல் நாஸ்ர் கிளப்பில் பொதுமக்களுக்காக டிரைவ்-த்ரூ கொரோனா சோதனை மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது உலகின் முதல் டிரைவ்-த்ரூ சோதனை மையமாகும். இந்த டிரைவ்-த்ரூ சோதனை மையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர் அனைவரும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். சோதனை மையத்திற்கு வருபவர்கள் தங்கள் காரை விட்டு வெளியேறாமல் ஐந்து நிமிடத்தில் சோதனை செய்யலாம். மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு மட்டும் இலவசமாகவும் மற்றவர்களுக்கு 100 டாலர் அளவிற்கு செலவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00