இத்தாலி கப்பலில் தவித்து வந்த இலங்கை சமையற்கலைஞர் : சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு

Apr 8 2020 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி கப்பலில் சிக்கிய இலங்கை சமையற்கலைஞர், சமூக வலைதளப் பதிவின் காரணமாக தாய்நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்.

இத்தாலியைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் இலங்கையிலிருந்து சென்று சமையற்கலைஞராகப் பணியாற்றிவருபவர் அனுரா பண்டாரா ஹெராத். இவர் பணியாற்றும் கப்பல், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக எந்த நாட்டுத் துறைமுகத்திலும் நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இலங்கை வழியாக ஐரோப்பா கண்டத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. இதற்கிடையே, எரிபொருள் நிரப்புவதற்காக கொழுப்பு அருகே மூன்று மணிநேரம் கப்பல் நிற்கும் என அறிவிக்கப்பட்டது. அக்கப்பலில் இருந்த ஒரே ஒரு இலங்கை நாட்டவரான ஹெராத், தனது நிலை குறித்தும், மீண்டும் இத்தாலிக்குச் சென்றால் நாடு திரும்புவது மிகவும் கடினம் என்றும் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, இலங்கை தொலைக்காட்சிகளில் அந்த வீடியோ தொர்ந்து மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனடிப்படையில், அதிபர் கோத்தபய ராஜபக்ஷ, ஹெராத்துக்கு சிறப்பு அனுமதியளித்தார். துறைமுகத்திலிருந்து தகுந்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட படகின் மூலம் அழைத்துவரப்பட்ட அவரை 21 நாட்கள் தனிமைப்படுத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00