ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்த குடும்பத்தினர்

Apr 8 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் உயிரிழந்தோருக்கு குடும்பத்தினர் பிரியாவிடை கொடுத்தனர்.

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் பாதுகாப்பாக மருத்துவத் துறையினரே அடக்கம் செய்துவருகின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உயிரிழந்த எராளமானோரின் உடல்கள் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு அடக்கம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது குடும்பத்தினர் மற்றம் நெருங்கிய உறவினர்கள் மட்டும் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். இது போன்ற ஒரு காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை உடல்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூட குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைக்குச் சென்றால், உயிர் பிழைத்தால் மட்டுமே வீட்டுக்குச் செல்லமுடியும்; இல்லையென்றால், குடும்பத்தினர் கூட இல்லாமல் ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யப்படும் பிணங்களின் வரிசையில் ஒன்றாக, சுடுகாட்டிற்குத் தான் செலலும் பரிதாப நிலை இன்றும் தொடர்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00