சீனாவுக்‍கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார அமைப்பு மீது விசாரணை நடத்த அமெரிக்‍க செனட்டர் கோரிக்கை

Apr 8 2020 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவுக்‍கு ஆதரவாக செயல்பட்டு, அமெரிக்‍க மக்‍களை மட்டுமல்லாமல், உலகையே, உலக சுகாதார நிறுவனம் ஏமாற்றி விட்டதாகவும், அந்த அமைப்பு மீது தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்‍க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 200 நாடுகளுக்‍கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்த சூழலில், உலக சகாதார நிறுவனம் மீது அமெரிக்‍க மக்‍கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் மீது தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழு தலைவர் ஜிம் சிஸ்ச் தெரிவித்துள்ளார்.

கொரோனா விவகாரத்தை கையாண்ட விதத்தில், குறைந்தபட்ச வெளிப்படைதன்மை கூட இல்லாமல், சீனாவுக்‍கு ஆதரவாக, உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டதாக கூறியுள்ளார். அமெரிக்‍க மக்‍களை மட்டுமல்லாமல், உலகையே, உலக சுகாதார நிறுவனம் தோற்கடித்து விட்டதாகவும், அந்த அமைப்பின் தலைவர் TEDROS ADHANOM GHEBREYESUS, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உலக சுகாதார நிறுவனம் வெளிப்படையாக நடந்து கொண்டிருந்தால், உலகம் முழுவதும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்‍கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00