முகக்கவசங்களின் வெளிப்பரப்பில் கொரோனா ஒரு வாரம் வரை உயிருடன் இருக்கும் : ஹாங்காங் பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Apr 6 2020 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

முகக்கவசங்களின் வெளிப்பரப்பில் கொரோனா வைரஸ் ஒரு வாரம் வரை உயிர்ப்புடன் நீடித்திருக்கக்கூடும் என ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்பது குறித்து ஹாங்காங் பல்கலைக்கழக சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வறிக்கை "Lancet" என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. முகக்கவசங்களின் வெளிப்பரப்பிலும், கொரோனா வைரசால் ஒரு வாரம் வரை உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவல் இந்த ஆய்வின் முடிவின் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்திய முகக்கவசங்களின் வெளிப்பகுதியை தொட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, கொரோனா வைரஸ் Tissue பேப்பரில் 3 மணி நேரத்திற்கும் குறைவாக உயிருடன் இருக்கும். மரத்துண்டுகள், துணிகளில் 2 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பிளாஸ்டிக் பொருட்களின் மேல் 4 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாத்துக்கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும், முகத்தை தொடாமல் இருக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00