சீனாவை மிரட்டும் Corona Virus - உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 118 ஆக அதிகரிப்பு

Feb 21 2020 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில், Corona Virus நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 118 ஆக உயர்ந்துவிட்டது. பல்வேறு மாகாணங்களில் 75 ஆயிரம் பேருக்கு Corona Virus பாதிப்பு, மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவின் Hubei மாகாணம் Wuhan நகரில் உருவான பயங்கர உயிர்க்கொல்லி நோயான Corona Virus, அந்நாட்டின் 31 மாகாணங்களிலும் வேகமாகப் பரவியுள்ளது. இதனைத் தடுக்க, சீன அரசு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும், நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். தற்போது, உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 118 ஆக உயர்ந்துவிட்டது. மேலும், பல்வேறு மாகாணங்களில் Corona Virus நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டிவிட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 114 பேர் வைரஸ் நோயால் உயிரிழந்தனர். இவர்களில், 108 பேர் Hubei மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 6 பேர் Shanghai, Fujian, Shandong, Yunan, Shaanxi ஆகிய மாகாணங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இதனிடையே, ஹாங்காங்கில் 65 பேருக்கு Corona Virus தொற்றியிருப்பதாகவும், அவர்களில் இரண்டுபேர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சீனாவில் தங்கியுள்ள இந்தியர்கள் 100 பேரை, ராணுவ விமானம் மூலம் அழைத்து வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00