உலகளவில் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் "அமெரிக்‍காஸ் காட் டேலண்ட்" நிகழ்ச்சி : 40 நாடுகளை பின்னுக்‍கு தள்ளி வாகைசூடிய இந்திய இளைஞர்கள்

Feb 20 2020 6:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் மிகவும் பிரபலமான `America's Got Talent' நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த நடனக்‍குழு வாகை சூடியுள்ளது.

அமெரிக்காவில் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக America's Got Talent என்ற தலைப்பில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து 40 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற Unbeatable என்ற மும்பை நடனக்‍குழு வாகை சூடியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய 29 இளைஞர்களைக்‍ கொண்ட இக்குழு, கடந்த ஆண்டும் இதே போட்டியில் 4வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இம்முறை முதலிடத்தைப் பெற்றுள்ளது. தர்பார் படத்தின் மரண மாஸ் பாடலுக்‍கு ஏற்ப இக்‍குழுவினர் நடனமாடியது ரசிகர்களை கவர்ந்தது. இக்‍காட்சி சமூக வலைதளங்களிலும் வைரலாகி உள்ளது.

22 வயதான விகாஸ் என்ற சக நடனக்‍ கலைஞரை விபத்து ஒன்றில் இழந்த நிலையில், போட்டியில் பங்கேற்ற மும்பை குழுவினர் அவரது முதல் எழுத்தான "வி" என்பதை தனது குழுவினர் பெயருடன் இணைத்து, V-Unbeatable என்ற தலைப்பில் களமிறங்கினர். இழந்த சக நடனக்‍ கலைஞரை நேசித்த மும்பை குழுவினர் பெற்ற வெற்றிக்‍கு ரன்வீர் சிங் உட்பட பாலிவுட் நடிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00