புவி வெப்பமயமாதலின் காரணமாக அண்டார்டிக்‍கா கண்டத்தில் நிவர்த்தி செய்ய முடியாத இழப்புக்‍கள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

Feb 19 2020 7:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

புவி வெப்பமயமாதலின் காரணமாக அண்டார்டிக்‍கா கண்டத்தில் நிவர்த்தி செய்ய முடியாத இழப்புக்‍கள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கார்பன் வெளியேற்றத்தைக்‍ கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்‍கை எடுக்காவிட்டால், அது மனித குலத்தின் அழிவுக்‍கு வித்திடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மக்‍கள் தொகை அதிகரிக்‍க, அதிகரிக்‍க தேவைகள் அதிகரிக்‍கின்றன. தேவைகளைப் பூர்த்தி செய்ய, புதிய தொழிற்சாலைகள் மிகவும் அத்தியாவசியமாகின்றன. தொழில் துறை என்றாலே, ஏதாவது ஒரு வகையில் சுற்றுப்புறச் சூழலைக்‍ கெடுக்‍கும் விதத்தில் தான் உள்ளது. இதில் மோசமான வேதிப்பொருட்களை வெளியேற்றி புவியின் மேற்பரப்பில் ஏராளமான கேடுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் ஒருபுறம் இருக்‍க, அதிக வெப்பத்தை ஏற்படுத்தி பூமியின் வளிமண்டலத்தை வெப்பமடையச் செய்யும் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்‍கின்றன. மேலும், காடுகளை அழித்தல், பல நாடுகளில் நடந்து வரும் போர்கள் உள்ளிட்ட காரணிகளின் ஒட்டுமொத்த விளைவாக, புவியின் மேற்பரப்பு வெப்பமடைந்து, உலகம் முபவதும் இருக்‍கும் பனிக்‍கட்டிகள் உருகிவருகின்றன. குறிப்பாக அன்டார்ட்டிக்‍கா கண்டம் உருகிவருவது பூமிக்‍கு பேராபத்து காத்திருப்பதை உணர்த்துகிறது. தற்போது, அன்டார்ட்டிக்‍கா கண்டத்தில் உருகி வரும் பனிப்பாறைகளை மீண்டும் ஒரு காலத்திலும் உருவாக்‍க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00