சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 81 பேர் உயிரிழப்பு - எல்லைப் பகுதியை மூடியது மங்கோலியா

Jan 28 2020 9:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 81 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டுடனான எல்லைப் பகுதியை மங்கோலியா மூடியுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 81 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 744 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை, சீன அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களில் 461 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும், மற்ற நாடுகளிலும் கரோனா வைரஸின் தாக்கம் காணப்படுகிறது. பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மங்கோலியா மூடியுள்ளது. இதனால், சீனாவில் இருந்து வரும் வாகனங்கள் மங்கோலியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மங்கோலியாவில் பள்ளிகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தாக்‍கத்தால் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00