டொனால்ட் ட்ரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் : செனட் சபையின் பரிசீலனைக்கு பிரதிநிதிகள் சபை அனுப்பியது - வரும் 21-ல் செனட் சபையில் விசாரணை?

Jan 17 2020 9:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் Donald Trump-ஐ, பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை, நாடாளுமன்ற செனட் சபையின் பரிசீலனைக்கு, பிரதிநிதிகள் சபை முறைப்படி அனுப்பியுள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி John Roberts தலைமையில், வரும் 21-ம் தேதி, செனட் சபையில், விசாரணை தொடங்கும் என, வாஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில், அதிபர் தேர்தல் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் நிலையில், குடியரசுக் கட்சி சார்பில், Donald Trump மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் Joe Biden போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் Joe Biden-க்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதால், அமெரிக்க மக்களிடையே, அவரது செல்வாக்கைக் குறைக்கும் முயற்சியில் Trump ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Joe Biden துணை அதிபராக இருந்தபோது, அவரது மகன் Hunter Biden, உக்ரைன் நாட்டில் பிரம்மாண்ட எரிசக்தி நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகித்தார். Joe Biden, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, உக்ரைன் அரசு மூலம், தனது மகனுக்கு, பல சலுகைகளைப் பெற்றதாக Trump குற்றம் சாட்டி வருகிறார். இதுதொடர்பாக, உக்ரைனில் Joe Biden மீது, உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky-யை, அதிபர் Trump நிர்பந்தப்படுத்தியதாக புகார் எழுந்தது. உக்ரைனில், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு பெருமளவு நிதியுதவி அளிக்க, அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், Joe Biden மீது, உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டால் தான், அந்த நிதியுதவியைத் தரமுடியும் என Volodymyr Zelensky-யிடம் Trump தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் Nancey Pelosy, அதிபர் Trump மீது, பிரதிநிதிகள் சபையில் பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவந்தார். ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை வகிக்கும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில், நீண்ட விசாரணைக்குப் பின்னர், பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில், வேறொரு நாட்டின் தலையீட்டை Trump கோரியது, அமெரிக்க தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும், தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்றும், இதன் மூலம் அதிபர் Trump, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாகவும் பதவி நீக்கத் தீர்மானத்தில் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, அடுத்தக்கட்டமாக, இந்தத் தீர்மானம் செனட் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும். அதன்படி, செனட் சபையின் விசாரணைக்கு, பதவி நீக்கத் தீர்மானம் முறைப்படி அனுப்பப்பட்டுள்ளது. செனட் சபை விசாரணையின்போது, ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் Trump-க்கு எதிராக வாதாடுவதற்காக, பிரதிநிதிகள் சபையின் நுண்ணறிவுக் குழு தலைவர் Adam Schiff தலைமையில் 7 உறுப்பினர்களை, சபாநாயகர் Nancey Pelosy நியமித்துள்ளார். அதிபர் Trump-ன் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள செனட் சபையிலும் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், உடனடியாக Trump, அதிபர் பதவியில் இருந்து விலக நேரிடும். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி John Roberts தலைமையில், வரும் 21-ம் தேதி, செனட் சபையில், விசாரணை தொடங்கும் என, வாஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00