ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் - அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம்

Jan 13 2020 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்கா - ஈரான் இடையே, மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடான, ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 80 பேர் பலியானதாக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்கா - ஈரான் இடையே, போர் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், சில நாட்களாக அமைதி திரும்பிய நி‌லையில், ‍நேற்றிரவு, பாக்தாத்தில் உள்ள ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க வீரர்களை குறிவைத்து, மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், ஈராக் ராணுவத்‌தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு இதுவரை, யாரும் ​பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து, அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00