பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து, இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் வெளியேறும் விவகாரம் - குடும்ப உறுப்பினர்களுடன் ராணி இரண்டாம் எலிசபெத் ஆலோசனை

Jan 13 2020 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தில் இருந்து, இளவரசர் ஹாரி மற்றும் அவருடைய மனைவி மேகன் வெளியேறும் பிரச்சனை தொடர்பாக, ராணி இரண்டாம் எலிசபெத், குடும்ப உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக, இளவரசர் ஹாரி, அவருடைய மனைவியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் ஆகியோர், அண்மையில் அறிவித்தனர். இது, அரச குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில தினங்களாக, ஹாரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத், அவசர குடும்ப ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். நார்போக்கில் உள்ள சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி, ஹாரி, அவருடைய சகோதரர் வில்லியம், இவர்களுடைய தந்தையான இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கனடாவில் இருக்கும் மேகன், தொலைபேசி மூலம் இந்தக் கூட்டத்தில் இணைந்து கொள்வார் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பின், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00