மறைந்த வெனிசுலா முன்னாள் அதிபர் சாவேசின் 60-வது பிறந்த நாள் விழா : லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

Jul 31 2014 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த முன்னாள் வெனிசுலா அதிபர் சாவேசின் 60-வது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்ள வந்த லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளின் அதிபர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சாவேசின் பிறந்த நாள் விழாவில், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடந்த 1999-ம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹியுகோ சாவேஸ், 2013-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி உயிரிழந்தார். மக்களிடையே பெரும் செல்வாக்கினைப் பெற்ற கவர்ச்சிகரமான தலைவராகத் திகழ்ந்த சாவேஸ் தனது சோசியலிசக் கொள்கைகளை அங்கு மேம்படுத்தியபோதிலும் இறுதிவரை ஒரு சர்ச்சைக்குரிய தலைவராகவே வாழ்ந்தார்.

சாவேசிக்கு பின் இன்றுவரை அரசியல் நிலைமையில் வெனிசுலா நாடு பிளவுபட்டே காணப்படுகின்றது. சாவேசின் மறைவிற்குப்பின் அவரது பிரதான சீடரும், அதிபர் பதவிக்கான அவரது விருப்பத் தேர்வுமான நிக்கோலஸ் மதுரோ அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இருப்பினும், பொருளாதார நெருக்கடி, அடிப்படைத் தேவைகளுக்கான பற்றாக்குறை, கட்டுக்கடங்கா பணவீக்கம், பரவியுள்ள குற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை இவர் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் இருந்து இவருக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 40 பேர் பலியாகியும், 873 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்று அரசு கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அங்கு மறைந்த அதிபர் சாவேசின் 60-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ மறைந்த அதிபர் சாவேசிற்கு பிறந்தநாள் வாழ்த்து பாடி கேக்கிலிருந்த மெழுகுவர்த்திகளை அணைத்து பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தொடங்கினார்.

வெனிசுலா வீதிகளில் ஒன்றுகூடிய மக்கள், மறைந்த அதிபருக்கு வாணவேடிக்கைகளுடன் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ராணுவ மரியாதையும் முன்னாள் அதிபர் ஹியுகோ சாவேசுக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கையெழுத்தினை அடிப்படையாகக் கொண்ட கணினி ஃபான்ட் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. சாவேசின் பிறந்த ஊரான சபநேட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மதுரோ தங்களது முன்னாள் அதிபர் வெனிசுவேலா மக்களின் விசுவாசத்தை நேசித்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதாக ஒரு சிறிய பறவை தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். மேலும், பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்ள வந்த லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளின் அதிபர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சாவேசின் பிறந்த நாள் விழாவில், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00