சிரியாவில், ISIS தீவிரவாதிகளின் ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது, அமெரிக்க விமானப்படை தாக்குதல் : 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

Sep 26 2014 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில் உள்ள ISIS தீவிரவாதிகளின் ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது, அமெரிக்கா விமானப்படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட ISIS தீவிரவாதிகள் பலியாகினர்.

ஈராக் மற்றும் சிரியாவை இணைத்து, இஸ்லாமிய தேசம் அமைக்கப் போவதாக அறிவித்துள்ள ISIS தீவிரவாதிகள், சிரியாவில் மையம் கொண்டு, ஈராக்கின் மீது தாக்குதல் நடத்தி, பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். அண்மையில் 2 அமெரிக்க பத்திரிகையாளர்கள், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவன ஊழியர், மேலும் ஃபிரான்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரது தலையைத் துண்டித்து கொலை செய்தனர். இதனால் ஆத்திரமுற்ற அதிபர் ஒபாமாவும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களும் கூடி ISIS தீவிரவாத அமைப்பை அழித்தொழிப்பது என முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில், ISIS தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரியும் ஈராக் அரசுப் படைகளுக்கும், ஈராக் குர்து இனப் படைகளுக்கும், பொருளாதார - ஆயுத உதவி வழங்குவது என்று முடிவெடுத்தனர். குறிப்பாக, சிரியாவில் உள்ள ISIS தீவிரவாதிகளின் ராணுவ நிலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்ட அதிபர் ஒபாமா, அதற்கான நிதி அனுமதி கோரும் மசோதாவை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்தார். அதற்கு 272-க்கு 156 என்ற வாக்குகளின் அடிப்படையில் அனுமதி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 73-க்கு 22 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் அனுமதி கிடைத்தது. இதனையடுத்து, எந்த நேரமும் ISIS தீவிரவாதிகளின் ராணுவ நிலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக, சிரியாவில் ISIS தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய் வயல்களைக் குறிவைத்து அமெரிக்கா விமானப்படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட ISIS தீவிரவாதிகள் பலியாகினர். மேலும் தீவிரவாதிகள் அமைத்திருந்த ஆயுதக் கிடங்குகள் மற்றும் வாகனங்கள் மீதும் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுவீசி வருகின்றன. இதனையடுத்து, ISIS தீவிரவாதிகள் தங்களது நிலைகளை மாற்றி வருவதாகவும், அவற்றை தங்களது ரேடர் கருவிகள் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00