உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில், தனி நாடு கேட்டு போராடும் ரஷ்ய ஆதரவாளர்களுக்கு எதிராக தலைநகர் கீவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

Apr 15 2014 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில், தனி நாடு கேட்டு போராடும் ரஷ்ய ஆதரவாளர்களுக்கு எதிராக தலைநகர் கீவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரைன் நாட்டில் மக்களின் போராட்டம் காரணமாக அந்நாட்டு அதிபர் ரஷ்யாவுக்கு தப்பியோடினார். இதனைத் தொடர்ந்து, உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த க்ரைமியாவை ரஷ்யபடைகள் ஆக்கிரமித்தன. அங்கு நடந்த வாக்கெடுப்பில் அப்பகுதி மக்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில், உக்ரைன் நாட்டின் கிழக்குப்பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்கள், அரசு அலுவலகங்களை கைப்பற்றி தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க உக்ரைன் அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வந்தது. இதனால், தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய எதிர்ப்பாளர்கள் நேற்று பல்லாயிரக்கணக்கில் திரண்டு ரஷ்ய ஆதரவாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரஷ்ய ஆதரவாளர்களை அரசு தண்டிக்காவிட்டால் அவர்களை ஒடுக்க தாங்களே ஆயுதமேந்தப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00