ரஷ்ய நாட்டின் எல்லையை மூடிய உக்ரைன் : ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக மீண்டும் முயற்சி

Sep 27 2014 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய நாட்டின் எல்லையை மூடியுள்ள உக்ரைன், மீண்டும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பினால் உக்ரைன்- ரஷ்யா இடையேயான வர்த்தகம் தடைப்படும் ஆபத்து உள்ளதால், உக்ரைனின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

பொருளாதார மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதாக கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் எடுத்த முடிவு அந்நாட்டின் முன்னாள் அதிபரும், ரஷ்ய ஆதரவாளருமான விக்டர் யானுகோவிச்சால் தடைப்பட்டதால் அங்கு பிரிவினைப் போராட்டங்கள் தொடங்கின. இதனையடுத்து, விக்டர் யானுகோவிச் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய அதிபராக பெட்ரோ பொரஷென்கோ தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே, உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதி பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவெடுத்தபோது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி ரஷ்யா அதனைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. கிரிமியாவைத் தொடர்ந்து டோநெட்ஸ்க், லுகான்ஸ்க் போன்ற கிழக்குப் பகுதி நகரங்களும் உக்ரைனை விடுத்து ரஷ்யாவுடன் இணைய போராட்டங்களை நடத்த தொடங்கின.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதால், தங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். அது தீவிரமடைந்து உள்நாட்டு போர் ஆக மாறியது. மேலும் கிழக்கு உக்ரனை சேர்ந்தவர்களுக்கு அண்டை நாடான ரஷ்யா, ஆயுதம் மற்றும் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. எனவே ஐரோப்பிய யூனியன் உட்பட மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்தன. பதிலுக்கு அந்நாடுகளின் மீது ரஷ்யாவும் பொருளாதார தடைகளை விதித்தது.

இவ்வாறாக உக்ரைனில் ராணுவத்திற்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு சண்டையில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், சண்டையின் உச்சக்கட்டமாக பிரிவினைவாதிகள் பிடியில் இருந்த பகுதியில், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறுதியில், கடந்த வாரம் உக்ரைன் ராணுவம் மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தை ரஷ்யா திரும்பப் பெற்றது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ 2020-க்கான ஐரோப்பிய யூனியன் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் வகையில் உக்ரைன்-ரஷ்யா எல்லைப்பகுதி வழியை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் கிழக்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் ஆயுதங்களை கடத்தி வர முயற்சி செய்து வருகிறார்கள் என்ற புகாரின் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் உக்ரைன்-ரஷ்யா இடையேயான வர்த்தகம் தடைபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், உக்ரைன் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00