துருக்கியில் நடைபெற்ற ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் : 50-க்கும் மேற்பட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் கைது

Jul 24 2014 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கியில் ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் போன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் 50-க்கும் மேற்பட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் எதிரிகள் மீதான நேரடி தாக்குதல் என கூறப்படுகிறது.

துருக்கியில், தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள் உட்பட முன்னாள் அதிகாரிகளையும் சேர்த்து 40 பேர் இஸ்தான்புல்லில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓமர் கோசும் அடங்குவார் என்று அந்நாட்டு தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன. மேலும், 15 பேர் நாட்டின் பிற பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். எர்டோகனின் முன்னாள் கூட்டாளியான பெதுல்லா குலன் பிரதமரையும் அவரது உள்வட்ட சகாக்களையும் இணைக்கும் ஒரு பரந்த ஊழல் குற்றச்சாட்டு இயக்கத்தினை நடத்துவதைத் தடுக்கும்பொருட்டு இந்த கைது நடவடிக்கை நடத்தப்பட்டதாகப் பத்திரிகை தகவல்கள் குறிப்பிடுகின்றன. அங்கு நடைபெற்ற பெரிய தேடுதல் நடவடிக்கையில் இஸ்தான்புல்லில் மட்டும் நூற்றுக்கணக்கான இடங்களை காவல்துறை சோதனையிட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இதேபோல், மேலும் 22 நகரங்களில் சோதனை நடந்துள்ளதாக தினப் பத்திரிகை ஒன்றும் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மீது உளவு, சட்ட விரோத ஒட்டுக்கேட்பு, தனியுரிமை மீறல், புனையப்பட்ட ஆதாரங்கள், ரகசிய விசாரணையை மீறிய குற்றங்கள் போன்றவை சுமத்தப்பட்டுள்ளன. ஒட்டுக்கேட்பு விவகாரங்களில் துருக்கியின் தேசிய புலனாய்வுத்துறை அமைப்பின் தலைவர் ஹக்கின் பிடனின் தொலைபேசித் தகவல்கள் இடம் பெற்றதாக இஸ்தான்புல்லின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துருக்கியில், அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை எதிரிகள் மீதான நேரடிப் பாய்ச்சல் என்று பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00