பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஆஸ்திரேலியா, பாப்புவா நியூகினியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

Apr 13 2014 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாப்புவா நியூகினியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலமன் தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் சாலமன் தீவிலிருந்து தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியா, பாப்புவா நியூகினியா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. சாலமன் தீவில் இம்மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00