தென்கொரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட படகு விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளரின் உடல் அடையாளம் காணப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Jul 24 2014 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் கொரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 476 பயணிகளை ஏற்றிச்சென்ற செவ்வோல் என்ற படகு அதிக சுமை காரணமாக கவிழ்ந்ததில் அதில் பயணித்த பள்ளி மாணவர்கள் உட்பட பெரும்பான்மையானோர் நீரில் மூழ்கி பலியாகினர். மொத்தம் 172 பேர் மட்டுமே இந்த விபத்தில் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்தன. விபத்து நடைபெற்றபோது பயணிகளைக் காப்பாற்றாமல் ஊழியர்கள் தப்பித்தது வீடியோக் காட்சிகள் மூலம் தெரியவந்தது. இது, மக்களிடையே கோபத்தையும், வேதனையையும் தூண்டியது.

இந்த விபத்திற்குக் காரணமான படகின் உரிமையாளரான யூ பியுங் உன் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். இவரைக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறியது அதிபர் பார்க் கெயுன் ஹையின் அரசுக்கு பெரும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகளிடமிருந்து பெற்றுத்தந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதியன்று பழத்தோட்டம் ஒன்றில், அழுகிய நிலையில் கிடந்த ஒரு பிணத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதன் அருகில் யூ எழுதிய புத்தகம் ஒன்றும், மூன்று காலி மது பாட்டில்களும், மீன் எண்ணெய் பாட்டில் ஒன்றும் காணப்பட்டது.

இந்த மீன் எண்ணெயும் யூவின் குடும்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். அதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட உடலின் DNA மற்றும் விரல் ரேகைகளைப் பரிசோதித்தபோது, அது யூ-வினுடைய உடல் என்பது தற்போது தெரியவந்துள்ளது. யூ எழுதிய புத்தகம் பிணத்தின் அருகில் இருந்தபோதும் அந்த உடலை அடையாளம் காணத் தவறிய இந்த வழக்கின் பொறுப்பினை ஏற்றிருந்த காவல்துறைத் தலைமை அதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பணக்காரத் தொழிலதிபராக அறியப்பட்ட யூ, இந்தப் படகுத் தொழிலுக்கும் உரிமையாளராக இருந்துவந்தார். இவரது மரணத்திற்கான காரணத்தை காவல்துறையினர் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றபோதும் மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகின்றனர். மருந்தாக்கவியல் சோதனைகளும் நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00